காதலனால் உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்ட 19 வயது இளம்பெண் உயிரிழப்பு... திருப்பூரில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

காதலனால் உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்ட 19 வயது இளம்பெண் உயிரிழப்பு... திருப்பூரில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!


thirupur-lover-burned-his-girlfriend-4RGZ2R

திருப்பூர் மாவட்டம், பல்லடம் பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள பனைப்பாளையம் பகுதியில் இளம்பெண் ஒருவர் உடலில் தீ காயங்களுடன் உயிருக்கு போராடி கிடந்துள்ளார். இதனை அவ்வழியாக வந்த மக்கள் பார்த்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிய பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்குச் சென்று அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அந்த பெண் ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த பூஜா(19) என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அந்தப் பெண் லோகேஷ் என்பவரை காதலித்து வந்ததாகவும், இருவரும் இன்று தனிமையில் சந்தித்து பேசிய போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனை வற்புறுத்தியதில் காதலன், காதலியை கடுமையாக தாக்கி விட்டு உயிருடன் தீ வைத்து கொளுத்தி சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியது தெரியவந்துள்ளது.

Girl Friend

அவ்வாறு தப்பிக்கும் போது இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து லோகேஷ்க்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. போலீசார் லோகேஷை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று காலை உயிரிழந்தார்.

இதையடுத்து போலீசார் லோகேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலனால் இளம்பெண் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.