தமிழகம்

மருத்துவமனை வளாகத்தில் பயங்கரம்.. இளைஞர் கத்தியால் குத்தி கொலை.. திருப்பத்தூரில் பேரதிர்ச்சி.!

Summary:

மருத்துவமனை வளாகத்தில் பயங்கரம்.. இளைஞர் கத்தியால் குத்தி கொலை.. திருப்பத்தூரில் பேரதிர்ச்சி.!

மருத்துவமனை வளாகத்தில், இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர், பெரியார் நகர் பகுதியில் வசித்து வருபவர் அண்ணாதுரை. இவரது மகன் முகிலன். இவர் சம்பவதினத்தன்று டி.எம்.எஸ் காலனி பகுதியில் வசித்து வந்த இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், சிறிது நேரத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியுள்ளது.

தொடர்ந்து அது கைகலப்பாக மாறிய நிலையில், முகிலனை அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் முகிலன் காயம் அடைந்ததால், அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

அப்போது தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் முகிலனை பின்தொடர்ந்து வந்து மருத்துவமனை வளாகத்தில், முகிலனை கத்தியால் சரமாரியாக தாக்கி தப்பியோடியுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த முகிலன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து முகிலனின் உறவினர்களுக்கு தெரியவர, அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர்.

பின் இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உறவினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சமாதானம் செய்ய முயற்சித்து வருகின்றனர்.


Advertisement