இந்து சமய அறநிலையத்துறை பெயரை நீக்கிவிட்டு இப்படி மாற்றுங்கள்..! திருமாவளவன் கோரிக்கை

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திரைப்பட இயக்குநர் வெற்றி மாறன், ராஜராஜ சோழ மன்னரை இந்து அரசனாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், ராஜராஜ சோழன் சைவர்தான். அவர் இந்து அல்ல. இந்து என்ற பெயர் ஆங்கிலேயர் சூட்டியது என சீமான், திருமாவளவன், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் சுட்டிக்காட்டி பேசினர்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில், இந்து சமய அறநிலையத்துறையை சைவ சமய அறநிலையத்துறை என்றும் வைணவ சமய அறநிலையத்துறை
என்றும் பெயர் மாற்ற வேண்டும் என கோரியுள்ளார்.
தமிழகத்தில் ஆளும் திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் வைத்த கோரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.