அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
காதலனை ஏமாற்ற மனம் வராததால் திருமணமான அடுத்த நாளே புதுமணப்பெண் செய்த அதிரடி செயல்..!
சேலம் மாவட்டம் கெங்கவல்லி, நடுவலூரைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரின் மகன் ரவிக்குமாருக்கு, சந்தியா என்ற பெண்ணுடன் கடந்த 3 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணமான அடுத்த நாள் சந்தியா கடைக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார்.
ஆனால் சந்தியா கடைக்கு சென்று வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் ரவிக்குமார் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதே சமயம் சந்தியா தனது காதலனான வல்லரசு என்பவரை திருமணம் செய்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அதனை அடுத்து காவல் நிலையம் சென்ற குடும்பத்தினரிடம் சந்தியா வல்லரசுவை தான் காதலித்து வந்ததாகவும், ஆனால் தங்களது காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளாமல் வழுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்ததாகவும் கூறியுள்ளார்.
இருப்பினும் தனது காதலை ஏமாற்ற தனக்கு மனம் வராததால் தான் இப்படி ஒரு செயலை செய்ததாக சந்தியா கூறியுள்ளார். அதனை அடுத்து ரவிக்குமாரின் குடும்பத்தினர் திருமணத்திற்கு ஆன 2 லட்சம் ரூபாய் செலவினை தர வேண்டும் என்று போலீசாரிடம் கூறியுள்ளார்.
அதன்படி திருமண செலவில் 1.25 லட்சம் ரூபாயை ரவிக்குமாருக்கு வல்லரசு தர வேண்டும் என்றும் மீதி 75 ஆயிரம் ரூபாயை சந்தியாவின் பெற்றோரும் இன்னும் 10 நாளில் தர வேண்டும் என்று எழுதி கொடுத்து விட்டு சென்றுள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.