உலகம்

இதென்னாட புதுசா இருக்கு! திருட வந்த இளைஞனை கதறவிட்ட பெண்.

Summary:

Thirudan

சாலையில் ஒரு பெண் தனியாக சென்று கொண்டிருந்த போது திருட வந்த இளைஞனை கதறவிட்டு பெண் செய்யும் வேலை வைரலாகி வருகிறது.தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக ஒரு வீடியோ பரவி வருகிறது. 

அதில் ஒரு பெண் தனியாக சாலையில் நடந்து செல்கிறார். அப்போது அவ்வழியாக ஒரு திருடன் தனது இரு சக்கர வாகனத்தில் அந்த பெண்ணை நெருங்குகிறான்.நெருங்கிய அந்த இளைஞர் வண்டியை சாலையில் விட்டு விட்டு அந்த பெண் கொண்டு வந்த கைப்பையை பிடுங்கி செல்கிறான். 

நொடி பொழுதில் அந்த பெண் தந்திரமாக செயல் பட்டு அந்த இளைஞன் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்லும் காட்சி அருகில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. மேலு‌ம் அந்த இளைஞன் பின்னாலே கத்தி கொண்டு சொல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது.


Advertisement