தாலிக்கயிற்றால் மனைவியை கொன்ற படுபாதக கணவன்.. தற்கொலை நாடகமாடி பகீர் செயல்.. அதிர்ச்சி சம்பவம்.!

தாலிக்கயிற்றால் மனைவியை கொன்ற படுபாதக கணவன்.. தற்கொலை நாடகமாடி பகீர் செயல்.. அதிர்ச்சி சம்பவம்.!theni-wife-murdered-by-her-husband

மனைவியை தாலிகயிற்றால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அவரே தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூர் அழகர்சாமி நகரில் வசித்து வருபவர் ராஜேஷ்குமார். இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரபா (வயது 34). தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மனைவியின் நடத்தை மீது ராஜேஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக பிரபா தற்கொலைக்கு முயன்றதாக அவரது கணவர் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விஷயம் தொடர்பாக பிரபாவின் தந்தை ஜெயராமன் காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், மகளிடம் ராஜேஷ்குமார் சண்டையிட்டு வந்ததாகவும் கூறி இருக்கிறார்.

Theni

இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது உடற்கூறு ஆய்வின் முடிவில், பிரபா தாலி கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்தது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து அவரது கணவரிடம் இந்த விஷயம் தொடர்பாக விசாரணை செய்ததில், அவர் பிரபாவை 'நான்தான் கொலை செய்தேன்' என்று ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் அவரை கைது செய்த காவல்துறையினர் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.