காத்து வாக்குல 3 கல்யாணம்.. போனில் செஞ்ச கணவனால் குடும்பத்தோடு தலைமறைவான சோகம்..!

காத்து வாக்குல 3 கல்யாணம்.. போனில் செஞ்ச கணவனால் குடும்பத்தோடு தலைமறைவான சோகம்..!


THENI WIFE MARRIED 3 PERSONS HUSBAND COMPLAINT

தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் கருப்பசாமி கோவில் தெருவில் வசித்து வருபவர் விஜய்போஸ் (வயது 32). இவர் பெங்களூரில் என்ஜினியராக பணியாற்றுகிறார். இவரின் மனைவி வித்யா (வயது 30). தம்பதிகளுக்கு கடந்த 2014 ஆம் வருடம் திருமணம் நடைபெற்று முடிந்தது. இருவருக்கும் 7 வயதுடைய மகன் இருக்கின்றார். 

விஜய் பெங்களூரில் பணியாற்றி வருவதால், வித்யா தனது மகனை சரிவர கவனிக்காமல் செல்போனும் கையுமாக இருந்து வந்துள்ளார். இதனால் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, இந்த தகவல் விஜய்க்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து விஜய் மனைவியை கண்டிக்க, வித்யாவின் உறவினர்களிடமும் தகவலை தெரிவித்து வித்யாவை கண்டிக்குமாறு கூறியுள்ளார்.  

அப்போது, வித்யாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை விவாகரத்து பெற்று இரண்டாவது திருமணம் செய்துகொண்ட உண்மை தெரியவந்துள்ளது. இதனை அறிந்த விஜய் மேலும் சண்டையை அதிகரிக்க, ஆத்திரமடைந்த வித்யா மதுரையில் உள்ள தாயின் வீட்டிற்கு சென்றுவிட்டார். மகனுடன் இருந்த விஜய் மனிவியை சமாதானம் செய்ய முயற்சித்தும் பலனில்லை. 

இந்த நிலையில், கடந்த மே 15 ஆம் தேதி கம்பம் காமயகவுண்டன்பட்டி பகுதியில் வசித்து வரும் முரளியை வித்யா மூன்றாவதாக திருமணம் செய்ததாக தெரியவந்துள்ளது. இதனைக்கேட்டு அதிர்ந்துபோன விஜய் குடும்பத்தினரிடம் நியாயம் கேட்க, அவர்களோ வரதட்சணை கொடுமை புகார் கொடுத்துவிடுவோம் என மிரட்டி இருக்கின்றனர். 

இதனையடுத்து, விஜய் உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வித்யா, வித்யாவின் தந்தை சுகுமாரன், தாய் சித்ரா, தம்பி சரண் மற்றும் முரளி ஆகிய 5 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வித்யாவின் 3 திருமணத்திற்கும் குடும்பத்தினர் உடந்தையாக இருந்ததும் உறுதியாகியுள்ளதால் அனைவர்க்கும் வலைவீசப்பட்டுள்ளது.