தனியாக வீடு எடுத்து இளம்பெண்ணை வைத்து விபச்சாரம்.. பெண் உட்பட 4 பேர் கைது.!Theni Periyakulam Prostitution Gang Police Investigation

கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், கீழ வடகரை ஊராட்சிக்குட்பட்ட அழகர்சாமிபுரம் கிராமத்தில் பாலியல் தொழில் நடைபெறுகிறது என பெரியகுளம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து, காவல் ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று நடத்திய சோதனையில், தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த சபிதா, சேதுமூர்த்தி, இராமமூர்த்தி, விஷ்ணு ஆகியோர் வாடகைக்கு வீடெடுத்து பாலியல் தொழில் நடத்தியது அம்பலமானது. 

Theni

அங்கு பாலியல் தொழிலை மேற்கொள்ள வெளியூரில் இருந்து இளம்பெண் ஒருவரும் அழைத்து வரப்பட்ட நிலையில், அவரை மீட்ட காவல் துறையினர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். பிற 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.