அரைபோதையில் காவலர்களை ஆபாசமாக பேசிய சில்வண்டுகள்; போதை தெளிந்ததும் கேஸ் போட்டு தூக்கிய போலீஸ்.!  Theni Periyakulam Atrocity Youngsters Arrested 

 

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், தாமரைக் குளம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவரின் மனைவி ஹேமலதா (வயது 28). நேற்று முன்தினம் மதியம் நேரத்தில் பட்டாளம்மன் கோவில் தெரு பகுதியில் துப்புரவு பணியாளர் விஜயா என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். 

அப்போது விஜயா வீட்டுக் கதவை உடைத்து ஹேமலதாவை மானபங்கப்படுத்திய நிலையில், அவர் அலறியபடி வெளியே வந்து இருக்கிறார். இதனை தட்டி கேட்ட விஜயாவை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

தேனி

இந்த சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த காமராஜ் (வயது 22), அவரின் நண்பர் மாசாணம் (வயது 22) ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவல் அறிந்த காவல்துறை அதிகாரி செந்தமிழ் செல்வன் மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், நடு ரோட்டில் மது பாட்டில் மற்றும் ஆயுதத்துடன் காமராஜ் தனது நண்பர் தீபக் ரவீந்திரன் ஆகியோர் தகராறு செய்துள்ளனர். 

மேலும், காவல் அதிகாரியை ஒருமையில் தரக்குறைவாக பேசி கத்தியை காண்பித்து மிரட்டி வெட்டவும் முயற்சித்தனர். இதனையடுத்து, பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீபக் & ரவீந்திரனை கைது செய்தனர். காமராஜ், மாசானம் ஆகியோருக்கு வலைவீசப்பட்டுள்ளது.