என் பொண்டாட்டிய நீயும், உன் மனைவியும் தான் சீரழிச்சீங்க.. நடுரோட்டில் பரபரப்பு கொலை.. பதறிப்போன மக்கள்.!

என் பொண்டாட்டிய நீயும், உன் மனைவியும் தான் சீரழிச்சீங்க.. நடுரோட்டில் பரபரப்பு கொலை.. பதறிப்போன மக்கள்.!


Theni Kambam Man Killed Another One

தனது மனைவியின் நடத்தை மாற்றத்திற்கு, அவருடன் பணியாற்றி வந்த பெண்ணே காரணம் என்று நினைத்தவர், சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவரை குத்தி கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், சி.எம்.எஸ் நகரில் வசித்து வருபவர் மகுடபதி (வயது 50). இவர் விவசாய கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மகன் இருக்கிறார். நேற்று, மகுடபதி வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க கம்பம் சுக்காங்கல்பட்டியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அவரிடம், கம்பம் நகராட்சி தெருவை சேர்ந்த மாரிச்செல்வம் (வயது 38) என்பவர் வாக்குவாதம் செய்துள்ளார். 

இந்த வாக்குவாதத்தின் போதே, மாரிச்செல்வம் கத்தியை எடுத்து மகுடபதியை சரமாரியாக தாக்கி இருக்கிறார். இதனால் இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மகுடபதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாரிச்செல்வம் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக கம்பம் தெற்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Theni

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மகுடபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, தப்பியோடிய மாரிச்செல்வத்தை அதிரடியாக கைது செய்து கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணையில், மாரிச்செல்வத்தின் மனைவி மற்றும் மகுடபதியின் மனைவி ஆகியோர் கேரளாவில் உள்ள ஏலத்தோட்டத்தில் கடந்த 4 வருடத்திற்கு முன்னதாக ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

அப்போது, மாரிச்செல்வத்தின் மனைவியை மகுடபதியின் மனைவி தவறான வழியில் அழைத்து சென்றதாக தெரியவருகிறது. இதனால் அவரின் நடத்தையும் மாறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாரிச்செல்வம், தனது மனைவியை தவறான பாதைக்கு அழைத்து சென்ற மகுடபதியின் மனைவியின் மீதும், மகுடபதியின் மீதும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதனாலேயே மகுடபதியை சம்பவத்தன்று கொலை செய்துள்ளார்.