சிறுவர்கள் விளையாடிய பகுதியில், துப்பாக்கி சூடு நடத்திய இராணுவ வீரர்.. தேனியில் பகீர் செயல்.!



Theni Army Officer Open Fire Near Child Playing Area in Street

விளையாடிக்கொண்டு இருந்த சிறார்களை பார்த்து, வான்நோக்கி இராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் வ.உ.சி நகரை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 2006 ஆம் வருடம் முதல் இராணுவத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு 9 மணியளவில் தனது கைதுப்பாக்கியுடன் அங்குள்ள சர்ச் தெருவுக்கு சென்ற முருகன், வீதிகளில் சிறார்கள் விளையாடுவதை பார்த்து வானத்தை நோக்கி சுட்டுள்ளார்.  

Theni

துப்பாக்கி சத்தம் கேட்டு பதறிப்போன பொதுமக்கள் வெளியே வர, சிறார்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். பின்னர், இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பொதுமக்களின் புகாரை பெற்றுக்கொண்டு, துப்பாக்கி தோட்டாவில் இருந்து வெளியேறிய கைப்பையை கைப்பற்றி இராணுவ வீரர் முருகனை கைது செய்தனர்.