ராணுவ வீரரின் வீட்டிற்குள் சென்ற திருடன்! தேசப்பற்றில் செய்துள்ள காரியத்தை பார்த்தீர்களா! ஷாக்கான போலீசார்! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம்

ராணுவ வீரரின் வீட்டிற்குள் சென்ற திருடன்! தேசப்பற்றில் செய்துள்ள காரியத்தை பார்த்தீர்களா! ஷாக்கான போலீசார்!

கேரளா மாநிலம் கொச்சி அருகேயுள்ள திருவாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஐசாக் மணி. இவர் முன்னாள் ராணுவ வீரராக இருந்துள்ளார் இந்நிலையில் அவர் கடந்த சில காலங்களுக்கு முன்பு குடும்பத்துடன் பக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திருடன் ஒருவன் திருவாங்குளம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பூட்டை உடைத்து  உள்ளே சென்றுள்ளார். அங்கு அவருக்கு எந்த பொருட்களும் கிடைக்கவில்லை.

 இந்நிலையில் அது ராணுவ வீரரின் வீடு என தெரிய வந்த நிலையில், தேசப்பற்று மிக்க அந்த திருடன் அந்த வீட்டிற்குள் திருட வந்ததற்கு மன்னிப்பு  கேட்க எண்ணியுள்ளார்.

 அதனைத் தொடர்ந்து அவர் வீட்டு சுவற்றில் இது ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் உள்ளே நுழைந்துவிட்டேன். கடைசி நேரத்தில் தான் அது எனக்கு தெரியவந்தது ராணுவ வீரரின் தொப்பியை வைத்துதான் நான் கண்டு பிடித்தேன். தெரியாமல் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து விட்டேன் என்னை மன்னிக்கவேண்டும். பைபிளில் ஏழாவது கட்டளையை மீறி விட்டேன் என்று எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளார். 

ஆனால் அதேவேளை ராணுவ வீரரின் வீட்டைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்த ஐந்து கடைகளில் திருடு போயுள்ளது. இந்நிலையில் இந்த திருட்டு சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த வினோத திருடனை தீவிரமாக தேடி வருகின்றனர்


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo