உயிரை பணயம் வச்சு வந்தவருக்கு இப்படியொரு நிலைமையா? மனவேதனையில் திருடன் எழுதிய ஷாக் கடிதம்!!

உயிரை பணயம் வச்சு வந்தவருக்கு இப்படியொரு நிலைமையா? மனவேதனையில் திருடன் எழுதிய ஷாக் கடிதம்!!


theif-write-letter-in-provisional-shop

கடலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஜெயராஜ். இவர் அப்பகுதியிலேயே மளிகைக்கடை ஒன்றை நடத்து வருகிறார்.இந்தநிலையில் ஜெயராஜ் எப்பொழுதும் போல நேற்று வியாபாரம் முடித்த பிறகு, இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும்  இன்று அதிகாலை கடையை திறந்துள்ளார்.

பொழுது கடையின் உள்ளே இருந்த மளிகை பொருட்கள் அனைத்தும் தூக்கி வீசப்பட்டு கண்ணாபின்னாவென அங்குமிங்கும் சிதறி கிடந்துள்ளது. மேலும் அதுமட்டுமின்றி கடையின் மேற்பக்க கூரையும் உடைக்கப்பட்டிருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயராஜ் கடை முழுவதும் ஆராய்ச்சி செய்துள்ளார்.அப்பொழுது அங்கு கடிதம் ஒன்று இருந்துள்ளது.

theif

மேலும் அதில், உயிரை பணயம் வச்சு திருட வந்தா காசு இல்லாம கல்லாவை தொடச்சி வச்சி என்னை ஏமாற்றலாமா, அதுக்குதான் இந்த குரங்கு வேலை" எழுதப்பட்டிருந்தது. இந்தநிலையில் நள்ளிரவில் கடையின் மேற்கூரையை உடைத்துகொண்டு திருடன் ஒருவன் உள்ளே குதித்துள்ளான். பின்னர் கல்லாவில் பணம் இல்லாததை கண்டு பெரும் ஏமாற்றமடைந்துள்ளான். அதனாலேயே மன உளைச்சலில் அவன் இவ்வாறு ஒரு கடிதத்தை எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளான் என ஜெயராஜ் புரிந்துகொண்டார்.

theif

பின்னர் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திருட கடைக்குள் நுழைந்த அந்த மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.