திருட சென்ற இடத்தில் மணக்கமணக்க இருந்த மீன்குழம்பு! அடுத்ததாக கொள்ளையர்கள் செய்த காரியத்தை பார்த்தீர்களா!theif-stole-fish-curry-in-house

குமரி மாவட்டம் தக்கலை பரைக்கோடு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், நாகர்கோவிலில் கார் பழுது பார்க்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இரவில் அவரது வீட்டு கதவை உடைத்து கொள்ளையர்கள் சிலர் உள்ளே வந்துள்ளனர். அங்கு அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தநிலையில் கொள்ளையர்கள் வீடுமுழுவதும் நகை, பணம் உள்ளதா என தேடிப்பார்த்ததாக கூறப்படுகிறது.

மேலும் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த கொள்ளையர்கள்  சமையலறைக்குள் புகுந்து சாப்பிட ஏதேனும் உள்ளதா என பார்த்துள்ளனர். ஒரு பாத்திரத்தில் மணமணக்க மீன் குழம்பு இருந்துள்ளது. பின்னர் அவர்கள் மீன்குழம்பையும்,  மற்றொரு பாத்திரத்தில் இருந்த சாப்பாட்டையும் எடுத்துக் கொண்டு பக்கத்துவீட்டு மொட்டைமாடிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

fish curry

பின்னர் அங்கு அமர்ந்து அனைத்தையும் சாப்பிட்டுவிட்டு பாத்திரத்தை அங்கேயே போட்டுவிட்டு சென்றுள்ளனர். மறுநாள் காலை வீட்டில்இருந்தவர்கள் எழுந்து பார்த்தபோது அங்கு சமையல் அறை கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வீட்டில் ஏதேனும் பொருட்கள் காணாமல் போயுள்ளதா என பார்த்தபோது எதுவும் திருடப்படவில்லை. ஆனால் சமையலறையில் இருந்த சாப்பாட்டு பாத்திரத்தை காணவில்லை. பின்னர் அங்குமிங்கும் தேடி பார்த்த நிலையில் பக்கத்து வீட்டு மாடியில் உணவுகள் அனைத்தும் காலியான நிலையில் பாத்திரங்கள் கிடந்துள்ளது.

இதுகுறித்து தெரிந்த நிலையில் அப்பகுதி மக்கள் நகைச்சுவையாக பேசி வந்துள்ளனர். இதற்கிடையில் அந்த திருடர்கள் அதே பகுதியில் பாக்கியம் என்பவரது வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர். ஆனால் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் எழுந்த நிலையில் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனைதொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.