சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி ஊர் ஊராக சுற்றிய இளைஞர்.. அதிரடி காட்டிய போலீஸ்.. நடந்தது என்ன..?the-young-man-who-seduced-the-girl-went-from-town-to-to

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்து 14 வயது சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்துள்ளார்.  இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி விக்னேஷ் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

மேலும் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற சிறுமியை காணவில்லை என்று பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சிறுமி விக்னேஷ் என்பவர் மீது காதல் வயப்பட்டது உறுதியானது.

young man

மேலும் விக்னேஷின் செல்போன் நம்பரை வைத்து போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் திருப்பூரில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி ஊர் ஊராக வலம் வந்த இளைஞரை போக்சோவில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.