என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
வேறொருவருடன் தொடர்பிலிருந்த மனைவி.. அதிர்ச்சியில் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம்..!

மேற்கு வங்க மாநிலம் பர்கானாஸ் மாவட்டம் கர்தா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துணி வியாபாரியான பிருந்தாபன் கர்மாகர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி தேபஸ்ரீ என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்நிலையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது அழுகிய நிலையில் நான்கு பேரின் சடலங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த சடலங்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்து கடிதம் ஒன்றினையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அந்த கடிதத்தில் பிருந்தாவன் மனைவி தேவஸ்ரீ வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததால் அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டிருந்தது. இதனையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.