பெரியகுளம் கண்மாய் மணல் திட்டில் 2 நாட்கள் தங்கியிருந்த வாலிபர் பத்திரமாக மீட்பு..!

பெரியகுளம் கண்மாய் மணல் திட்டில் 2 நாட்கள் தங்கியிருந்த வாலிபர் பத்திரமாக மீட்பு..!


The teenager who stayed in the Periyakulam Kanmai sandbar for 2 days was safely rescued..!

ஸ்ரீவில்லிபுத்தூர் காந்திநகர் பகுதியில் சூரிய பிரகாஷ் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சூரிய பிரகாஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறது. 

இதனை தொடர்ந்து  சூரிய பிரகாஷ் இரண்டு நாட்களாக வீட்டிற்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் பதறிப்போன பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி அலைந்துள்ளனர். இதனையடுத்து சூரிய பிரகாஷ் பெரியகுளம் கண்மாய் நடுப்பகுதியில் இருந்த மணல் திட்டில் இருப்பதை பெற்றோர் கண்டறிந்துள்ளனர். 

young man

இதனை தொடர்ந்து சூரிய பிரகாஷின் பெற்றோர் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சூரிய பிரகாஷ் பயந்து எதிர் திசையில் நீந்தி செல்ல தொடங்கியுள்ளார். 

இதனால் சூரிய பிரகாஷின் உறவினர்கள் பெரியகுளம் கண்மாயின் எதிர் கரையில் அவருக்காக காத்திருந்தனர். இதனையடுத்து நீந்தி மறுகரையை வந்தடைந்த சூரிய பிரகாஷை அங்கிருந்த உறவினர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.