BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
லிஃப்ட் கேட்டு கஞ்சா கடத்திய கில்லாடி வாலிபர்: பொறி வைத்து பிடித்த போலீசார்..!
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள ஆரம்பாக்கம் காவல் நிலையம் எதிரே உள்ள சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு மாவட்ட தனிப்படை காவலர்கள் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். சோதனையின் போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரியை அவர்கள் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த லாரியில் லிப்ட் கேட்டு பயணம் செய்த ஆந்திர மாநிலம் தடா பகுதியை சேர்ந்த வாலிபர் ராமமூர்த்தி (22) என்பவர் 21 கிலோ எடை கொண்ட கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து ஆரம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வாலிபர் ராமமூர்த்தியை கைது செய்து, அவரிடம் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
அதே நேரத்தில் திருத்தணி-சித்தூர் சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே நடைபெற்ற வாகன சோதனையில் அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவர் 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலத்துடன் சிக்கினார். இதனையடுத்து அவரிடமிருந்து கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கோண்டதில் அவர் திருத்தணி வள்ளிநகரை சேர்ந்த பரத்ராஜ் (19) என தெரிய வந்தது.