காட்டுக்குள் காதலனுடன் தனிமையில் இருந்த மாணவி.. கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடூர கும்பல்..!

காட்டுக்குள் காதலனுடன் தனிமையில் இருந்த மாணவி.. கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடூர கும்பல்..!


the-student-who-was-alone-with-her-boyfriend-in-the-for

காஞ்சிபுரத்தில் தனியாக காதலுடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை 4 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரத்தில் செவிலிமேடு அடுத்துள்ள குண்டு குளம் காட்டுப்பகுதியில் மாணவி ஒருவர் தனது காதலனுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த 4  பேர் கொண்ட கும்பல் ஒன்று அந்த காதல் ஜோடியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர்களிடமிருந்து பணம் செல்போன் மற்றும் வாகனத்தை பறித்ததோடு மட்டுமல்லாமல் அப்பெண்ணின் காதலனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அந்தக் கல்லூரி மாணவியை 4 பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

Women

மேலும் இதனை வெளியே சொல்லக்கூடாது என்று அந்த கல்லூரி மாணவியை அவர்கள் மிரட்டி உள்ளனர். இதனையடுத்து அந்த மாணவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பிய காதலன் வரும் வழியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்திய போலீசார் குண்டுகுளம் பகுதியை சேர்ந்த ஊமை மணிகண்டன், விமல், தென்னரசு மற்றும் ஊக்கு என்கிற சிவகுமார் ஆகிய 4 காம  கொடூரன்களையும் போலிசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.