தமிழகம்

சென்னைக்கு வந்த ரயிலில் கிடந்த துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் கால்.! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

சேலத்தில் இருந்து சரக்கு ரயில் ஒன்று நேற்று முன்தினம் மாலை சென்னை துறைமுகத்துக்கு வந்தடைந்

சேலத்தில் இருந்து சரக்கு ரயில் ஒன்று நேற்று முன்தினம் மாலை சென்னை துறைமுகத்துக்கு வந்தடைந்தது. இதனையடுத்து அந்த சரக்கு ரயிலில் இருந்த இரும்பு கம்பிகளை இறக்கும் பணியில் துறைமுக ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது சரக்கு ரயிலில் கொண்டு வரப்பட்ட இரும்பு கம்பிகளுக்கு இடையே துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் கால் ஒன்று கிடந்துள்ளது.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த துறைமுக ஊழியர்கள் இதுகுறித்து துறைமுகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துறைமுகம் போலீசார், துண்டிக்கப்பட்ட ஆணின் காலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, ரயில்வே போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.

    

சேலத்தில் இருந்து சென்னை வரும் வழியில் அந்த நபர் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டதா? அல்லது யாராவது அவரை கொலை செய்துவிட்டு அடையாளம் தெரியாமல் இருக்க இவ்வாறு செய்துள்ளனாரா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சென்னை துறைமுகத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.


Advertisement