தனியாக இருந்த கர்பிணி பெண் மர்ம சாவு: காரணம் தெரியாமல் குழம்பும் போலீசார்..!

தனியாக இருந்த கர்பிணி பெண் மர்ம சாவு: காரணம் தெரியாமல் குழம்பும் போலீசார்..!


The pregnant woman who was alone died mysteriously

ஈரோடு மாவட்டம், நசியனூர் அருகேயுள்ள ராயபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (26). இவரது மனைவி பிருந்தா (23). இந்த தம்பதியினர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ராயபாளையம் பகுதியில் வீடு வாடைகைக்கு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். பிருந்தா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில், கடந்த 27ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற்ற உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கார்த்தி சென்றுள்ளார். இதனால் பிருந்தா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்த பிருந்தா, அந்த நிறுவனம் வழங்கிய உணவை உண்ட பின்பு தூங்கியுள்ளார்.

மறுநாள் காலை வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் கழித்தும் அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதன் காரணமாக சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து அவரது தாய் மற்றும் கணவர் கார்த்திக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த அவர்கள், கதவை உடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பிருந்தா உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சித்தோடு காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து பிருந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே பிருந்தா உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.