டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்: கூட்ட நெரிசலால் போலீஸ் தடியடி..!! சேப்பாக்கத்தில் பரபரப்பு..!!

டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்: கூட்ட நெரிசலால் போலீஸ் தடியடி..!! சேப்பாக்கத்தில் பரபரப்பு..!!



the-police-used-batons-to-control-the-crowd-of-fans-who

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 44 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், வரும் 6 தேதி இத்தொடரின் 49 வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு துவங்கியது.  நேற்று நள்ளிரவு முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதன் காரணமாக டிக்கெட் கவுண்டரில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, டிக்கெட் வாங்க, மாற்றுத்திறனாளிகளுக்காக தனிவரிசை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாற்றுத்திறனாளி ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.