முந்தரி தோப்பில் வைத்து சிறுமியை சீரழித்த காமுகன்!.. உடந்தையாக இருந்த தாய்: தட்டி தூக்கிய போலீசார்..!

முந்தரி தோப்பில் வைத்து சிறுமியை சீரழித்த காமுகன்!.. உடந்தையாக இருந்த தாய்: தட்டி தூக்கிய போலீசார்..!


The police have arrested a youth who kidnapped and sexually harassed a 17-year-old girl under the POCSO Act

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி  சாந்தி. இந்த தம்பதியினரின் மகன் ஜெயக்குமார் (22). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது டூ-வீலரில்  17 வயது சிறுமியை கடத்திச்சென்றுள்ளார். இதன் பின்னர் சிறுமியை கரைமேடு கிராமத்தில் உள்ள அவர்களது குடும்பத்திற்கு சொந்தமான முந்திரி தோப்பில் உள்ள குடிசையில் அடைத்துவைத்துடன் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

திடீரென மாயமான சீறுமியை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். காவல்துறையினர் சிறுமியை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு திரும்பிய சிறுமி, தனக்கு நிகழ்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், தங்களது மகளை சீரழித்த காமுகன் குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவரது தாயார் உடந்தையாக இருந்தது தெரிய வந்ததால் அவரையும் கைது செய்துள்ளனர்.