சபலத்தால் பலியான உயிர்... தாய்ப்பால் கொடுத்ததை வீடியோ எடுத்த முதியவர்... கொன்று கால்வாயில் வீசிய இளைஞர்கள்.!

சபலத்தால் பலியான உயிர்... தாய்ப்பால் கொடுத்ததை வீடியோ எடுத்த முதியவர்... கொன்று கால்வாயில் வீசிய இளைஞர்கள்.!


the-old-man-who-took-a-video-of-breastfeeding-the-youth

கோவையில்  இளம் பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததை மறைந்திருந்து வீடியோ எடுத்த முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை சாய்பாபா காலனி கேகே புதூர் பகுதியை சேர்ந்த முஸ்தாக் என்ற நபர் அதே பகுதியில் உள்ள சாக்கடையில் தலையில் பலத்த காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டனர்.

tamilnadu

காவல்துறையின் விசாரணையில் அந்த நபர் மூன்று இளைஞர்களால் அடித்து சாக்கடையில் தூக்கி வீசப்பட்டது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் அதே பகுதியைச் சேர்ந்த ராகுல் (24), மணிகண்ட மூர்த்தி (26), மனோஜ் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சியான உண்மை வெளியாகி இருக்கிறது.

tamilnaduகேகே.புதூர் பகுதியில்  24 வயது இளைஞர் ஒருவர் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் வசித்து வருகிறார். அவரது மனைவி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்திருக்கிறார் முதியவர் முஸ்தாக். இதை கவனித்த அந்த பெண் கூச்சல் போட்டுள்ளார். அப்போது அவரது சத்தம் கேட்டு வந்த இளைஞர்கள் முதியவரை கடுமையாக தாக்கி சாக்கடையில் வீசி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து  அந்த மூன்று இளைஞர்களின் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை சிறையில் அடைத்தது.