வீட்டின் பூட்டை உடைத்து கூலாக திருடிய மர்ம நபர்: முற்றுகையிட்டு மொத்திய மக்கள்..!

வீட்டின் பூட்டை உடைத்து கூலாக திருடிய மர்ம நபர்: முற்றுகையிட்டு மொத்திய மக்கள்..!


the-mysterious-person-who-broke-the-lock-of-the-house-a

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகேயுள்ள தெற்கு நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி சுகந்தி . இவர்களுக்கு 1 மகள். அவர் இந்த தம்பதியரின் வீட்டின் அருகே உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் அவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார். 

இந்தநிலையில், நேற்று இரவு அவரது வீட்டிற்குள் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து, வேல்முருகன் தம்பதியர் அங்கு சென்றுபார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டுக்குள்ளே மர்ம நபர் ஒருவர் பொருட்களை திருடிக்கொண்டுக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு கூச்சலிட்டுள்ளனர். 

இவர்களது சத்தம் கேட்டு அங்கு கூடிய அக்கம்பக்கத்தினர், வீட்டில் பொருட்களை திருட முயன்றவரை பிடித்து குரும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்தூறையினர் விசாரணை நடத்தியதில், வீடு புகுந்து திருட முயன்றவர் சூசைபாண்டியா புரத்தைச் சேர்ந்த கார்சிங் மகன் ஜேம்ஸ் பிரவீன் (24) என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது