இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த மர்ம கும்பல்: பட்டப்பகலில் துணிகரம்..!

இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த மர்ம கும்பல்: பட்டப்பகலில் துணிகரம்..!


The mysterious gang chased the young man away and killed him

சென்னை, பூந்தமல்லி அருகேயுள்ள வெள்ளவேடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் என்கிற ஸ்டீபன் ராஜ் ( 22). இவர் தனியார் நிறுவனத்தின் இன்டர்நெட் கேபிள் பதிக்கும் பணிபுரிந்து வந்தார். இவர் மீது வெள்ள்வேடு காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ,பூந்தமல்லியை அடுத்த புளியம்பேடு பகுதியில் தனது நண்பர் ஸ்ரீதர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் இண்டர்நெட் வயரை எடுத்துக் கொண்டு சென்ற போது இவர்களை வழிமறித்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து அவர்களிடம் இருந்து தப்பியோட முயற்சி செய்த ஸ்டீபன் ராஜை  விரட்டி சென்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த தாக்குதலில், ஸ்டீபன் ராஜ் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே துடி, துடித்து உயிரிழந்தார். அவருடன் வந்த ஸ்ரீதர் லேசான காயத்துடன் அங்கிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பூந்தமல்லி காவல் துணை ஆணையர் முத்துவேல் பாண்டி, காவல் ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன் ஆகியோர் தலைமையில் வந்த காவல்துறையினர், கொலை செய்யப்பட்டு கிடந்த ஸ்டீபன் ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்த கொலைக்கு காரணம், ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிவாங்கும் விதமாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் முன் விரோதம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.