பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த நபர்; செல்போனில் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள்... அதிர்ச்சியில் போலீசார்...!The man who took the video of the women taking a shower; More than 100 videos on cell phone... Police in shock...

சென்னையில் குடியிருப்பு பாத்ரூமில் செல்போனை மறைத்து வைத்து 100 க்கும் மேற்பட்ட பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த நபர் கைது. 

வடபழனியில் வசிக்கும்  12-வது வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி ஒருவர் அங்கிருக்கு பொது குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜன்னல் வழியாக செல்போன் மூலம் ஒருவர் வீடியோ எடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

இதுகுறித்து உடனடியாக தனது பெற்றோரிடத்தில் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் செல்போனில் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாக பிடித்து வடபழனி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபரின் பெயர் வினோத்குமார் (37) என்றும், பத்து குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் சிறுமி வீட்டுக்கு அருகாமையில் அவர் வசித்து வந்ததும் தெரியவந்தது. 

மேலும் அவர் சென்னை மாநகராட்சி 11வது மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலைசெய்து வருவதும் தெரியவந்தது.
அந்த குடியிருப்பு பகுதியில் 10 க்கும் மேற்பட்ட வீடுகளும் அவற்றிற்கு பொது குளியலறையும் உள்ளது.

அங்கு குளிக்க வரும் சிறுமிகள் மற்றும் பெண்கள் என அனைவரையும் அவரது செல்போனில் வீடியோ எடுப்பதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார்.
என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. சமீபத்தில் வினோத்குமாரின் மனைவி இறந்ததால் தனிமையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் குடியிருப்பில் வசிக்கும் பெண்கள் குளிக்கும்போது அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார. இது போல 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் அவரது செல்போனில் இருப்பதை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்த சைபர் லேப்-க்கு வினோத்குமாரின் செல்போனை அனுப்பினர். தொடர்ந்து போக்சோ பிரிவின் கீழ் காவல்துறையினர் வினோத்குமாரை கைது செய்தனர். வடபழனி காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.