மது குடிக்க பணம் கேட்ட கணவர்... பணம் தர மறுத்த மனைவி... பின்னர் கணவர் செய்த பரபரப்பு சம்பவம்..!

மது குடிக்க பணம் கேட்ட கணவர்... பணம் தர மறுத்த மனைவி... பின்னர் கணவர் செய்த பரபரப்பு சம்பவம்..!


the-husband-asked-for-money-to-drink-alcohol-the-wife-r

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே காக்காபாளையத்தை சேர்ந்தவர்கள் திருவாசகம்- ரூபா தம்பதியினர். திருவாசகம் கூலி வேலை செய்து வருகிறார். மேலும் இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும், ஒரு தனியார் மருத்துவமனையில் மன அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவாசகம் மனைவி ரூபாவிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் ரூபா பணம் தர மறுக்கவே திருவாசகம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்னர் திருவாசகத்தை மீட்டு மகுடஞ்சாவடி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.

Drunk altercation

இந்நிலையில் மீண்டும் மனைவி ரூபாவிடம் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் ரூபா மீண்டும் பணம் தர மறுக்கவே  ஆத்திரத்தில் இருந்த திருவாசகம் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு  முயன்றுள்ளார்.

மேலும் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி ரூபா கணவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு திருவாசகத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.