தமிழகம்

தொடர்ந்து 10 நாட்களாக குப்பை அருகே சுருண்டு கிடக்கும் ஆதரவற்ற முதியவர்.! நடவடிக்கை எடுக்கப்படுமா.?

Summary:

ஆதரவற்ற முதியவர் ஒருவர் கடந்த 10 நாட்களாக குப்பையோடு குப்பையாக கிடக்கும் அவலம் திருவள்ளுவர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தர்மராஜா கோயில் அருகில் ஒரு முதியவரை கடந்த 10 நாட்களுக்கு முன்பாக, ஒரு சாக்குப்பையில் கிடத்தி விட்டு சென்றுள்ளனர் அந்த முதியவரின் உறவினர்கள். சுயநினைவு இல்லாமல் அந்த முதியவரால் எழுந்து நிற்பதற்கும், நடப்பதற்கும் முடியாமல் ஒரே படுக்கையாக கிடந்தது தவித்துவருகிறார்.

கடந்த 10 நாட்களாக கடும் குளிரில் உண்ண உணவின்றி படுக்க வசதியின்றி கிடக்கும் அந்த முதியவரின் காட்சி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது. அந்த முதியவர் கடந்த 10 நாட்களாக கிடப்பதை பார்த்த சமூக ஆர்வலர் ஓருவர் ஆம்புலன்சிற்கு போன் செய்துள்ளார். ஆனால் ஆதரவற்ற முதியோருக்கு எங்களால் உதவ முடியாது என அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பலரும் நடமாடும் அந்த இடத்தில கடந்த 10 நாட்களில் யாருமே கண்டுகொள்ளாமல் இந்த முதியோர் குப்பையோடு குப்பையாய் இருப்பது பெரும் வேதனையளிப்பதாக கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள். மேலும் அந்த முதியவரை முதியோர் இல்லத்தில் சேர்க்க சமூக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement