ஓடும் ரயிலில் இருந்து கீழே விழ இருந்த பெண்..! காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை காவலர்!!.. குவியும் பாராட்டு..!!

ஓடும் ரயிலில் இருந்து கீழே விழ இருந்த பெண்..! காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை காவலர்!!.. குவியும் பாராட்டு..!!


the-girl-who-was-about-to-fall-down-from-the-moving-tra

திருச்சி ரயில் நிலைய சந்திப்பில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண், தவறி விழ இருந்ததை ரயில்வே பாதுகாப்பு படை வீரர் காப்பாற்றும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

திருச்சி ரயில் நிலைய சந்திப்பில், சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் "குருவாயூர் எக்ஸ்பிரஸ்" ரயில் மதியம் இரண்டு மணியளவில் 4வது நடைமேடையை வந்தடைந்தது.

பயணிகளை இறக்கி, ஏற்றிவிட்டு மீண்டும் ரயில் கிளம்பிய கடைசி நேரத்தில் 45- வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயிலில் ஏற முயன்றார்.  அந்த பெண் ஓடும் ரயிலில் படிக்கட்டில் கால் வைத்த உடன் தடுமாறி, பின்பக்கமாக சாய்ந்து விழுந்து, ரயிலுக்கும் தண்டவாளத்திற்க்கும் இருக்கும் இடைவெளியில் விழ இருந்தார்

இதை கவனித்த திருச்சி ரயில்வே  பாதுகாப்பு படை போலீஸ் சதீஷ்குமார், விரைந்து சென்று அந்த பெண்ணை பிடித்து இழுத்து நடைமேடையில் விட்டார். மிக வேகமாக செயல்பட்டு பெண்ணின் உயிரை காப்பாற்றிய சதீஷ் குமாரை அந்த பெண் உள்பட, அங்கிருந்த பயணிகள் அனைவரும் பாராட்டினர். அப்போது பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது, சமூக வலைத்தளங்களில் வோகமாக பரவி வருகிறது.