நகை வாங்க போன இடத்தில் தாயான சிறுமி.! அதிர்ச்சியில் உறைந்த தாய்..!

நகை வாங்க போன இடத்தில் தாயான சிறுமி.! அதிர்ச்சியில் உறைந்த தாய்..!


the-girl-who-became-a-mother-at-the-age-of-15-is-a-shoc

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் அந்த சிறுமி (15). இவர் புதுப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் ஆடிப்பெருக்கு திருநாளையொட்டி மாணவிக்கு நகை வாங்க திட்டமிட்ட்ச் அவரது தாய், மாணவியை அழைத்துக் கொண்டு விழுப்புரத்தில் உள்ள ஒரு நகைக்கடைக்கு சென்றார்.

கடைக்கு சென்ற சிறிது நேரத்தில் மாணவி, வயிறு வலிப்பதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர், தனது மகளை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், தற்போது பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, மாணவியை பிரசவத்திற்காக அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறிது நேரத்தில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து கர்ப்பமானது குறித்து மாணவியிடம், அவரது தாய் விசாரித்தார். அப்போது மாணவி, கோட்லாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜா (21) என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், கடந்த ஓராண்டாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உல்லாசம் அனுபவித்து வந்ததும், இதில் கர்ப்பமானதாகவும் தெரிவித்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், தனது மகள் கர்பமானது குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜா மீது வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.