உருண்டு, புரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாப்பா,! அள்ளிக் கொண்டு போன போலீசார்!: கலெக்டர் ஆபீஸில் பரபரப்பு..!

உருண்டு, புரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாப்பா,! அள்ளிக் கொண்டு போன போலீசார்!: கலெக்டர் ஆபீஸில் பரபரப்பு..!


the-daughter-and-son-in-law-threatened-and-extorted-his

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள ஓலைப்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் பாப்பா (70). இவருடைய மகன் சசிகுமார் (37). இவர்கள் இருவரும் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மாவட்ட ஆட்சியரின் கார் முன்பு தரையில் படுத்து  தர்ணா போராட்டம் நடத்தினர்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சேலம் டவுன் காவல் நிலைய ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட தாய், மகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். காவல்துறையினர் கூறிய சமாதானங்களை ஏற்காத அவர்கள் இருவரும் தரையில் உருண்டு அழுது புரண்டனர்.

இதனைத் தொடர்ந்து இருவரையும் அவர்களை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றிய காவல்துறையினர், சேலம் டவுன் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், தனது மகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீர்வரிசையாக நகை மற்றும் பணம் கொடுத்து திருமணம் செய்து வைத்ததாகவும்,  மகளும், மருமகனும் சேர்ந்து மிரட்டி தனது சொத்தை அபகரித்து கொண்டதாகவும் கூறினார்.

மேலும், இதுகுறித்து தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அபகரித்த சொத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்று பாப்பா கூறியுள்ளார். சேலத்தில் சொத்து பிரச்சினையில் தாய், மகன் ஆகியோர் கலெக்டரின் கார் முன்பு படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.