தமிழகம்

புளிய மரத்தில் தொங்கிய கட்டை பையிலிருந்து கேட்ட அழுகை சத்தம்.. அருகே சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

Summary:

the-cruel-mother-put-her-newborn-baby- for under the tree

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இளங்குடிப்பட்டியில் உள்ள அய்யனார் கோவில் முன் உள்ள புளிய மரத்தடியில் குழந்தையின் அழுக்குரல் கேட்டுள்ளது. அவ்வழியாக சென்ற சிலர் அருகில் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கட்டை பையில் கட்டி புளிய மரத்தடியில் தொங்கவிடப்பட்டிருந்தது. உடனே அங்கிருந்தவர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதனையடுத்து போலீசார் குழந்தை கைப்பற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

குழந்தையின் உடல்நலம் குறித்து சைல்டு லைன் அமைப்பினர் கவனித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து நமணசமுத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


Advertisement