கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
நண்பனை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கு... 4 நண்பர்களுக்கு ஆயுள் தண்டனை.!

ஓடிஸா மாநிலத்திலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலில் தங்களுடன் பயணித்த நண்பரை கீழே தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டு இருக்கிறது விருதாச்சலம் நீதிமன்றம்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் கட்டிட வேலை செய்வதற்காக ஐந்து நண்பர்கள் வந்து கொண்டிருந்தனர். ரயில் தமிழகத்திற்குள் வந்து கொண்டிருந்தபோது ஆகாஷ் தாஸ் என்ற நபர் தான் ஊருக்கு திரும்பி செல்ல விரும்புவதாக நண்பர்களிடம் தெரிவித்திருக்கிறார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.
கொடுத்த அட்வான்ஸ் 3000 ரூபாயை திருப்பித் தரக் கோரி மோதலில் ஈடுபட்ட நண்பர்கள் ரயில் விருதாச்சலம் அருகே உள்ள தாழநல்லூர் என்ற கிராமத்தில் வரும்போது ரயிலின் பின்பக்க கதவை திறந்து ஆகாஷ் தாசை வெளியே தள்ளியிருக்கின்றனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நான்கு பேரும் விருதாச்சலம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்து குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும் ஐயாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது விருதாச்சலம் கூடுதல் அமர்வு நீதிமன்றம்.