காதலியை தனது நண்பர்களுக்கு இறையாக்கிய காதலன்.. போக்சோ சட்டத்தில் அதிரடி கைது..!the-boyfriend-who-made-his-girlfriend-a-god-to-his-frie

மதுரையில் பிளஸ் 1 படிக்கும் மாணவியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரையை சேர்ந்த கார்த்திக் என்பவர் அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் கீரைதுறையில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்ற சிறுமியை கார்த்திக் நைசாக பேசி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களை போன் செய்து வரவழைத்து அவர்களுடன் சேர்ந்து சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது.

Gang rap

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறவே அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் சிறுமியின் இந்த நிலைமைக்கு காரணமான அந்த மூன்று காம கொடூரன்களையும் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.