கொரோனாவை ஒழிக்க பாடுபடும் அனைவருக்கும் நன்றி தெரிவித்த நல்ல உள்ளங்கள்! அதிலும் சிறுவனின் வீடியோவை பாருங்கள்!



thanks to doctors


இந்தியப்‌ பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளுக்கு இணங்க இந்தியா முழுவதும் இன்று மாலை 5 மணிக்கு கொரோனாவை ஒழிக்கப் பாடுபடும், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அனைவருக்கும் மக்கள் கரவோசை எழுப்பி நன்றி தெரிவித்துள்ளனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி, உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதை அடுத்து, இந்தியா முழுவதும் இன்று ஒருநாள் சுய ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் பிரதமரின் வேண்டுகோளுக்கு மக்கள் அனைவரும் ஆதரவு தந்து யாரும் வீட்டை விட்டு வெளியேவராமல் வீட்டிற்குள்ளே முடங்கி இருந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு வீட்டிற்குள் இருந்தபடியும், வீட்டின் பால்கனியில் நின்ற‌படியும் கைதட்டி கொரோனாவை ஒழிக்கப் பாடுபடும், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அனைவருக்கும் மக்கள் கரவோசை எழுப்பி நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், தமிழகத்தில் மதுரையை சேர்ந்த சிறுவன் ஒருவன், தன் நாட்டு மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்த போராடும் அணைத்து ஊழியர்களுக்கும் உச்சகட்ட நன்றியினை தெரிவித்துள்ளான். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.