தமிழகம்

கணவன் இறந்த துக்கத்தால் விபரீதம்.. மகன்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை.!

Summary:

கணவன் இறந்த துக்கத்தால் விபரீதம்.. மகன்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை.!

கணவர் இறந்த துக்கத்தில் மகன்களுக்கு விஷம் கொடுத்து, தாயும் தற்கொலைக்கு முயன்றதில் இரண்டு மகன்களும் உயிரிழந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூதலூர் அருகாமையில் வெண்டயம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சத்யா (வயது 30). இவரது கணவர் விஜயகுமார் கடந்த மார்ச் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், கணவர் இறந்ததால் மிகவும் மனமுடைந்த சத்யா தானும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வந்துள்ளார். இருப்பினும் தான் இறந்து விட்டால் தனது குழந்தைகள் அனாதையாகி விடுவார்களே என்று நிலையில், செய்வதறியாது யோசனையிலேயே இருந்துள்ளார்.

அப்போது மனதை கல்லாக்கிக் கொண்டு முதலில் தனது மூத்த மகன் முகேஷ் மற்றும் இளைய மகன் நித்திஷ்க்கு விஷத்தை கொடுத்து, பின் அவரும் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், அப்போது அங்கு வந்த உறவினர் ரங்கசாமி என்பவர் சத்யா குடித்த விஷத்தில் பாதியை தட்டிவிட்டார்.தொடர்ந்து உடனடியாக தாய் மற்றும் மகன்களை தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் நிதிஷ் உயிரிழந்த நிலையில், இன்று அதிகாலை முகேஷும் உயிரிழந்துள்ளார். தாய் சத்யா உயிருக்கு போராடிய நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பின் இது தொடர்பாக உறவினர் ரங்கசாமி காவல்துறையில் புகார் அளித்ததை தொடர்ந்து, பூதலூர் காவல்துறை இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். அத்துடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விஷம் குடித்ததில், இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement