தமிழகம்

பார்சல் யாரு அனுப்புனதுனு தெரியல..! ஆனால்? பார்சலை திறந்து பார்த்த மொத்த குடும்பத்தினருக்கும் காத்திருந்த பெரும் அதிர்ச்சி.

Summary:

Thanajvur dangerous parcel in courier

தஞ்சாவூரை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவருக்கு வந்துள்ள மர்ம பார்சல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அமைந்துள்ளது கண்ணந்தங்குடி. இந்த கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவரின் 27 வயது மகன் அறிவழகன் என்பவர் பொறியியல் படிப்பு படித்து முடித்து உள்ள நிலையில் தனது தந்தைக்கு உதவியாக விவசாயம் பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் அறிவழகனுக்கு ஒரு கொரியர் வந்துள்ளதாகவும் அதை வந்து பெற்றுச் செல்லுமாறு ஒரத்த நாட்டில் உள்ள கொரியர் நிறுவனம் ஒன்றில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட கொரியர் நிறுவனத்திற்கு சென்று அங்கிருந்து பார்சலை வாங்கிக் கொண்டு அறிவழகன் தனது வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டிற்கு சென்ற பிறகு அந்த பார்சலை திறந்து பார்த்த போது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம் கொரியரில் வந்திருந்த மர்ம பார்சலில் மிகவும் அபாயகரமான வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே இது குறித்து அறிவழகனின் குடும்பத்தினர் ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து ஒரத்தநாடு போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அறிவழகன் வீட்டிற்குச் சென்று வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்களை கைப்பற்றி அதனை எடுத்துச் சென்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள போலீசார், சம்பந்தப்பட்ட பார்சல் திருச்சி தென்னூர் ஹைரோடு, 10.சி. வெள்ளாளர் தெரு, சி.கார்திரப்பன் என்ற முகவரியில் இருந்து பார்சல் வந்துள்ளதாகவும், ஆனால் அது போலியா முகவரி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்சலில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் கனெக்டிங் டெட்டனேட்டர், ஜெலட்டின் போன்ற அபாயகரமான வெடிகுண்டு தயாரிக்கும் மூலப் பொருட்கள் இருந்து உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement