"தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" அக்கா-தம்பி பாசத்தை பொழிந்த தமிழிசை செளந்தரராஜன்.!

"தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" அக்கா-தம்பி பாசத்தை பொழிந்த தமிழிசை செளந்தரராஜன்.!


thamilisai-sountharajan-talk-about-vijayabaskar

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சித்த மருத்துவர்களுக்கு ஆயுஸ் எக்சலெண்ட் விழா சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார். 

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழிசை செளந்தரராஜன், "எல்லோரும் கூறுவார்கள் தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று, தம்பி விஜயபாஸ்கர் இருப்பதால் கொரோனாவிற்கு அஞ்சேன் என தெரிவித்தார். மேலும், தெலுங்கானாவில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோது, நான் தெலுங்கானா முதலவர் அவர்களுடன் பேசியபோது, கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் தீவிரமாக சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் என கூறினார்.

thamilisaiஇது குறித்து சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களிடம் கேட்டு சொல்கிறேன் என கூறினேன். அதேபோல் பாரத பிரதமர் மோடியிடமும் அதிகமாக பரிசோதனை செய்து கட்டுக்குள் வைத்து உள்ளீர்கள் என்று பாராட்டை பெற்றுள்ளது தமிழக சுகாதாரத்துறை" என கூறினார்.