தல அஜித் மீது வழக்கா! கொந்தளிக்கும் ரசிகர்கள்.!

தல அஜித் மீது வழக்கா! கொந்தளிக்கும் ரசிகர்கள்.!



thala-ajith---viswasam-movie---vanni-arasu

தியேட்டரில் நடந்த கத்தி குத்து சம்பவம், விஸ்வாசம் படம் பார்க்க பணம் கொடுக்காத தந்தையை மகன் எரித்த சம்பவம், இவைகளை கண்டுகொள்ளாத அஜித் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் தல அஜித் நடித்த விசுவாசம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல்வேறு தரப்பினரிடமிருந்தும் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது திரையரங்குகளுக்கு குடும்பம் குடும்பங்களாக சென்று படம் பார்ப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

viswasam

இது ஒருபுறமிருக்க இப்படம் வெளியான சமயத்தில் ஒரு சில அசம்பாவித சம்பவங்களும் நிகழ்ந்தது. இந்நிலையில் தற்சமயம் சில தனியார் தொலைக்காட்சி சேனல்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளும் பிரபலமடைந்து வருகிறது.

viswasam

இந்நிலையில் இதுபோன்ற விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நபராக விளங்கும் வன்னி அரசு என்பவர் பேசும் போது, “தற்போது வெளியாகும் முக்கிய நடிகர்கள் நடித்த படங்களில், எந்த படம் வெற்றி பெற்றுள்ளது என்பது தொடர்பாக, அரசு உட்பட பலரால் கட்டமைக்கப்பட்டுகின்றன. 

அண்மையில் வெளியான விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராத தந்தையை மகன் எரித்த சம்பவம், அஜித் கட் அவுட் சரிந்து விபத்து, தியேட்டரில் இருக்கை கிடைப்பதில் பிரச்னையால் கத்தி குத்து என அசம்பாவிதங்கள் நடக்கின்றன. இதை எல்லாம் தட்டிக் கேட்காத அஜித் மீது எஃப்.ஐ.ஆர் போட வேண்டும்.” என பேசியுள்ளார்.