15 வயது பருவ ஈர்ப்பு.. காதலி தற்கொலை செய்த சோகத்தில், 16 வயது சிறுவனும் தற்கொலை.. தென்காசியில் பரிதாபம்.!Tenkasi Sankarankovil 2 Minor Couple suicide

15 வயதில் பருவ காதலில் விழுந்த சிறுமி பெற்றோர் கூறிய அறிவுரையால் தற்கொலை செய்துகொள்ள, சிறுமியை காதலித்த 16 வயது சிறுவனும் தற்கொலை செய்து உயிரைவிட்ட சோகம் நடந்துள்ளது. எதற்கெடுத்தாலும் தற்கொலை என்று ஆரம்பித்துள்ள 2 கே கிட்களின் விபரீத எண்ணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், தேவர்குளம் பகுதியை சேர்ந்த சிறுவன்பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று விட்டு வீட்டில் இருக்கிறார். இங்குள்ள பள்ளியில் பயின்று வரும் 10-ம் வகுப்பு மாணவியை சிறுவன் காதலித்து வந்ததாக தெரியவருகிறது.

சிறுமியும் பருவ காதலில் விழுந்ததாக கூறப்படும் நிலையில், இருவரின் காதல் விவகாரமும் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் படிக்கும் வயதில் காதல் தேவையற்றது என்பதால், படிப்பில் நாட்டம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். 

Tenkasi

எங்கு தனது பெற்றோர் தங்களின் காதலுக்கு வில்லனாக மாறிவிடுவார்களோ என்று அஞ்சிய சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக தெரியவருகிறது. சிறுமியின் தற்கொலையை காவல்துறையினருக்கு தெரிவிக்காத பெற்றோர் உடலை அடக்கம் செய்துள்ளனர். இந்த தகவல் சிறுவனுக்கு தெரியவந்துள்ளது.

காதலியே இறந்துவிட்டால் நாம் ஏன் உயிர் வாழ வேண்டும் என்று எண்ணிய விபரீத 2 கே கிட் தற்கொலை செய்து உயிரை மாய்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த தேவர்குளம் காவல் துறையினர் 2 மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.