தமிழகம்

ஆசீர்வாதம் வாங்க வந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த சாமியார் கைது!

Summary:

Temple priest arrested for sexual assault

சாமியார் என்ற போர்வையில்  பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் போலி ஆசாமிகளின் எண்ணிக்கை நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

சென்னை மீஞ்சூரில் உள்ள ஒரு கோவிலில் இருந்த சாமியார் தன்னிடம் ஆசிர்வாதம் வாங்க வந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் சாமியாரை கைது செய்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை மாலை திருவள்ளூரை சேர்ந்த 34 வயது திருமணமான பெண் அந்த சாமியாரை சந்திக்க சென்றுள்ளார். அந்த சாமியாரின் பெயர் ராஜசேகர் என்பது தெரியவந்துள்ளது. தனியாக வந்த அந்தப் பெண்ணிடம் அந்த சாமியார் "உன்மீது தீயசக்திகள் உள்ளன. அவற்றை விரட்ட சிறப்பு பூஜை செய்ய வேண்டும்" என கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை ஒரு அறைக்கு அழைத்துச் சென்ற சாமியார் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதனால் பதறிப்போன அந்தப் பெண் அங்கிருந்து தப்பி வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் மீஞ்சூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சாமியாரை நேற்று கைது செய்தனர்.


Advertisement