ஆசிரியரை வட்டமிட்டு கும்மியடிக்கும் மாணவர்கள்.. தலையில் கைவைத்த ஆசிரியர்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!

ஆசிரியரை வட்டமிட்டு கும்மியடிக்கும் மாணவர்கள்.. தலையில் கைவைத்த ஆசிரியர்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!


teacher-trolled-by-student-shocking-video-trending-on-s

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று பெற்றோர்களுக்கு அடுத்த இடத்தில் உள்ள ஆசிரியர்களின் நிலை இன்று தலைகீழாக மாறிவிட்டது. சில இடங்களில் ஆசிரியர்கள் மீது குற்றசாட்டுகள் வந்தாலும், நல்ல ஆசிரியர்களுக்கு எதிராக நடக்கும் செயல்கள் வருத்தத்தையே அளிக்கிறது. 

5 வருடங்களுக்கு முன்னர் வரை பள்ளியில் ஏதேனும் தவறு செய்தால், ஆசிரியர்கள் தோலை உரித்துவிடுவார்கள் என்ற பயம் இருக்கும். நாம் நன்றாக வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக, நமது பெற்றோரும் ஆசிரியர்களே எனது மகனை கண்டியுங்கள் என்று கூறுவார்கள். 

இன்றளவில் அந்த நிலையானது முற்றிலுமாக மாறி, ஆசிரியர்களின் குறைந்தபட்ச ஆலோசனைகளை கூட கேட்காமல் அவர்களை கலாய்ப்பது, நச்சான வீடியோ எடுத்து வெளியிடுவது என பல செயல்கள் நடக்கிறது. இதனை எதிர்கால தலைமுறை என்று கூறப்படும் மாணவர்கள் செய்வதே பெரும் கொடுமை. 

அந்த வகையில், சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எப்போது? எங்கு பதிவு செய்யப்பட்டது? என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.