மாணவனை நாயை போல பிஸ்கட் சாப்பிட வைத்த ஆசிரியர்.. நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்.! பெற்றோர் புகார்.!Teacher throw away the biscuit and asked the student eat it like a dog

நாமக்கல் மாவட்டத்தில் உலா ராசிபுரம், போடியநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வரும் தமிழ் ஆசிரியர் மணிகண்டன். நேற்று பள்ளியின் தலைமை ஆசிரியர் பூர்ணிமா, ஆசிரியர் உமா தேவி ஆகியோர் விடுமுறையில் சென்றுள்ளனர். 

இதனால் தற்காலிக ஆசிரியரான மணிகண்டன் பள்ளியில் இருந்த நிலையில், அங்கு படித்து வரும் 2 மாணவிகள், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 3ம் வகுப்பு மாணவர் ஆகியோரை மணிகண்டன் தின்பண்டம் வாங்க கடைக்கு அனுப்பி வைத்துள்ளார். 

அவர்கள் ஆசிரியர் கூறிய தின்பண்டங்களை வாங்காமல் முறுக்கு, பிஸ்கட் போன்றவற்றை வாங்கி வந்துள்ளதாக தெரியவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மாணவனை மண்டியிடச்சொல்லி, பிஸ்கட்டை தூக்கி வீசி நாயை போல் சாப்பிட வைத்துள்ளார்.

tamilnadu

அங்கிருந்த குப்பையை எடுத்து மாணவரின் பாக்கெட்டில் திணித்து குப்பைத்தொட்டி என கிண்டல் செய்துள்ளார். இதனால் மாணவன் அழுதுகொண்டே வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் நடந்தை கூறியுள்ளான். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துவிட்டு பள்ளிக்கு விரைந்தனர். அங்கு விசர்நாய் நடத்தப்பட்டு பெற்றோர் தரப்பிடமும் பேசப்பட்டது. விசாரணைக்கு பின்னர் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக வட்டார கல்வி அலுவலர் பாலசுப்பிரமணி தெரிவித்தார்.