கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
மாணவியின் ஆடையை அவிழ்க்க சொன்ன கணக்கு ஆசிரியர், ஆவேசமாகி கணக்கை முடித்த பெற்றோர்களால் பரபரப்பு.!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கணக்கு ஆசிரியரை மாணவியின் உறவினர்கள் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை செங்கம் அருகே உள்ள மேல்நாச்சிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றுபவர் கண்ணன். இவர் ஆயுதபூஜை விடுமுறைக்கு முன் பத்தாம் வகுப்பு மாணவியை சிறப்பு வகுப்புக்கு வரக்கூறி அவரது ஆடையை விலக்க கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில்இன்று பூஜை விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அந்த மாணவி பள்ளிக்கு செல்லமாட்டேன் என பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அப்போதுஅதற்கு பெற்றோர்கள் காரணம் கேட்டதற்கு கணக்கு ஆசிரியர் கண்ணன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மனைவி தெரிவித்துள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது வகுப்பறையில் கண்ணன் பாடம் எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்த மாணவியின் உறவினர்கள் அவரை அடித்து உதைத்து தாக்குதலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த கண்ணன் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.