2 நாட்களில் இறந்துவிடுவேன்! வெளிநாட்டில் அவதிப்படும் தமிழக இளைஞன்! கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் உலகம் வீடியோ

2 நாட்களில் இறந்துவிடுவேன்! வெளிநாட்டில் அவதிப்படும் தமிழக இளைஞன்! கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ!

தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் கணேஷ்குமார். 27 வயது நிறைந்த இவர் டிப்ளமோ படித்துவிட்டு, துபாயில் வேலை செய்வதற்காக கடந்த ஜனவரி மாதம் சென்றுள்ளார். ஆனால் கொரோனா தாக்கத்தின் காரணமாக அவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. அதனால் அவர் தனது நண்பர்களது  அறையில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் கணேஷ்குமாருக்கு திடீரென மஞ்சள்காமாலை தாக்கியுள்ளது. மேலும் புற்றுநோய்க்கான அறிகுறி இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் கணேஷ்குமார் துபாயில் மருத்துவ உதவி எதுவும் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

 

இந்நிலையில் கணேஷ்குமார் அங்கிருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது நிலையை விளக்கிக் கூறிய அவர், மார்ச் மாதத்திலிருந்து எனக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு உள்ளது. மேலும் எனது உடல் எடை குறைந்துவிட்டது. எதுவும் சாப்பிட முடியவில்லை. என்ன சாப்பிட்டாலும் வாந்தி வருகிறது. என் உடலில் சக்தியே இல்லை. 3 நாளைக்கு ஒருமுறை குளுக்கோஸ் ஏற்றுக்கொள்கிறேன். ஒருமுறை குளுக்கோஸ் ஏற்ற 4000ரூ கேட்கிறார்கள். நான் இங்கு இந்திய வெளியுறவுத் துறையை தொடர்பு கொண்டேன். ஆனால் எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.
நாளுக்கு நாள் எனது நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. எனக்கு மருத்துவ உதவிகள் வேண்டும் என்னை ஊருக்கு அனுப்பி விடுங்கள். இல்லையெனில் இரண்டு மூன்று நாட்களில் நான் இறந்து விடுவேன். எனது சடலத்தையாவது சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள் என்று தழுதழுத்த குரலில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை கண்ட கணேஷ்குமாரின் பெற்றோர்கள் எனது மகனை மீட்டு தர மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும். வரும் 22ஆம் தேதி துபாயில் இருந்து கேரளாவிற்கு விமானம் வரவிருப்பதாக கூறப்படுகிறது. அதன்மூலம் எனது மகனை மீட்டுத்தாருங்கள் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo