மக்களே கவனம்.. இன்று முதல் தமிழகமெங்கும் வெளுத்துவாங்கும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

மக்களே கவனம்.. இன்று முதல் தமிழகமெங்கும் வெளுத்துவாங்கும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!



Tamilnadu rainfall alert

 

சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதிவரை வடமேற்கு திசையில் தமிழக மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக 9-ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10-ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

tamilnadu

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 9-ஆம் தேதியான இன்று மன்னார்வளைகுடா அதனை ஒட்டியுள்ள குமரிகடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், 65 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.