ஜல்லி, எம்.சாண்ட், கிரானைட் கற்கள் விலை உயரும் அபாயம்; தொடங்கியது வேலை நிறுத்தம்..!Tamilnadu Quarry Owners Strike 

 

தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் கல்குவாரி உரிமையாளர்கள், நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து தொடங்கி இருக்கின்றனர். 

தமிழ்நாட்டில் 2,400-க்கும் அதிகமான கல்குவாரிகள், 3,000-க்கும் அதிகமான கிரஷர்கள் இருக்கின்றன. தற்போதைய விதிமுறைகளின் காரணமாக அவர்களின் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தமிழ்நாடு கல்குவாரி உரிமையாளர்கள் அறிவித்து இருக்கின்றனர். இது ஜல்லி, எம்.சாண்ட், கிரானைட் கற்கள் தட்டுப்படை ஏற்படுத்தும் என்பதால், அதன் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.