தமிழக அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை; சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

tamilnadu minister balakrishna reddy 3year jail


tamilnadu minister balakrishna reddy 3year jail

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

1998 ஆம் ஆண்டு தமிழக கர்நாடக எல்லையில் நடைபெற்ற கலவரத்தின்போது அரசுப் பேருந்தின் மீது கல் எரிந்ததாக 108 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் 16 பேர் குற்றவாளிகள் என சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் பாலகிருஷ்ண ரெட்டி 16 பேரில் ஒருவர் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமைச்சராக இருப்பவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் உடனடியாக அமைச்சர் பதவி இழந்து தனது எம்எல்ஏ அந்தஸ்தையும்  இழப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.