தமிழகம் இந்தியா Covid-19

என்ன சார் சொல்ட்ரீங்க!! அதிக கொரோனா பரவலில் 3ம் இடத்தில் தமிழகம்!! முதல் மற்றும் இரண்டாம் இடம் எந்த மாநிலம் தெரியுமா??

Summary:

இந்தியாவில் கொரோனா பரவலில் கர்நாடகா, கேரளத்திற்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலில் கர்நாடகா, கேரளத்திற்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் பலலட்சம் மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும், பல ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்தும் வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் தீவிரமாக போராடிவருகிறது.

இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று பரவலில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிக பாதிப்பில் கர்நாடகா முதல் இடத்திலும், கேரளா இரண்டாவது இடத்திலும் உள்ளது. மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது.

அதேபோல் மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப், அசாம், ஹிமாச்சல், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, நகலாந்து, அருணாச்சல பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் மற்றும் கோவா மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Advertisement